Monday, 12 December 2016

Google AdSense new ad unite உருவாக்கவது எப்படி ?

Google AdSense கணக்கை  வைத்திருப்பவர்கள் தங்கள் இணைய தளத்திற்குரிய  விளம்பரங்களின் அளவு எப்படி பட்ட விளம்பரம் உருவாக்க வேண்டும் என்பதை
இந்த காணொளி  விளக்குகிறது
Google AdSense new ad unite உருவாக்கவது எப்படி ?
Share:
Read More

Sunday, 11 December 2016

YouTube முலம் பணம் சம்பாதிப்பது எப்படி ?

கூகிள் அட் சென்ஸ்  YouTube கணக்கிற்கு பெறுவது எப்படி 
Share:
Read More

தாயை சந்திக்க சென்ற மோடி..!!

Z ப்ளஸ் பாதுகாப்பை மீறி தனது சொந்த ஊரில் உள்ள தாயாரை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியில் பல்வேறு அரசு நிகழ்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு நிகழ்சிகளில் பங்கேற்ற பின் பாதுகாப்பு அதிகாரிகளின் ‘ப்ரோட்டோகால்’ விதிகளை மீறி தனது சொந்த ஊரான ரேசானுக்கு திடீரென வாகனத்தை கொண்டு செல்ல சொன்னார். அங்கு தனது தாயார் ஹீரா பென்னை சந்தித்த மோடி அரை மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் நலம் விசாரித்து விட்டு பின்னர் பாதுகாப்பு வளையத்துக்கு திரும்பினார். மோடியின் சகோதரருடன் வசித்து வரும் ஹீரா பென் அண்மையில் வங்கிக்கு சென்று வரிசையில் நின்று தன்னிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share:
Read More

வேற்று கிரக வாசிகளின் சோதனை விண் கலம்

கடந்த மாதம் அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ள, ஏரிய 51 என்னும் இடத்திற்கு அருகாமையில் மிக வினோதமான விமானங்கள் பறந்ததாகவும். அது வேற்றுக் கிரகவாசிகளின் தொழில் நுட்ப்பத்தை கையாண்டு அமெரிக்கா தயாரித்து இருக்கவேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். இதற்கான ஆதாராமாக அவர்கள், வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.
Share:
Read More

பாரிசில் தொடரும் தேடுதல் வேட்டை!! - மேலும் ஒரு பயங்கரவாதி கைது!

RAiD படையினரின் அதிரடி சோதனை நடவடிக்கைகளில், நேற்று பயங்கரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். சனிக்கிழமை, நண்பகலில் Ariege மாவட்டத்தின் Pamiers ( Foix) பகுதியில் வைத்து இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட RAiD படையினர், சமூகவலைத்தளத்தினூடாக பெறப்பட்ட தகவலின் ஆதாரத்திலேயே மேற்படி நபரை கைது செய்துள்ளார்கள். இஸ்லாம் மதத்துக்காக கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், தீவிர இஸ்லாத்தை சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பரப்பியதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. Foix நகர அரச வழக்கறிஞர் Karline Bouisset தெரிவிக்கும் போது, நேற்று சனிக்கிழமை பேஸ்புக்கில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாக தகலவ் கிடைத்ததும், அச்சுறுத்தல் விடுத்த நபரை RAiD படையினர் கைது செய்துள்ளனர் என தெரிவித்தார். மேலும், பிந்திக்கிடைத்த தகவல்களின் படி, கைதுசெய்யப்பட்ட நபர், ஏற்கனவே கடந்த ஜனவரியிலும் கைது செய்யப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:
Read More

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்? - சீமான்

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றதும் தெரியவில்லை, அவர் வெளியே வந்ததும் தெரியவில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் ஏன் என நடிகை கௌதமிக்கு எழுந்துள்ள சந்தேகம், லட்சக்கணக்கான மக்களின் மனதில் எழுந்துள்ளது.

ஏன் எனக்கும் கூட அந்த சந்தேகம் எழுந்துள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது பல்வேறு மக்கள் அவருக்காக பால்காவடி ஏந்தி பூஜைகள் செய்தனர்.

அப்படியிருக்கையில், அவர் நலமாகிவிட்டார் என்றால், அவருக்காக பூஜை செய்த மக்களை சந்தித்திருக்கலாம். மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுடன் பேசியதாக அந்த செவிலியர்களே கூறுகிறார்கள். அப்படியிருக்கையில் அவர் மக்களுடன் பேசியிருக்கலாம்.

உடல்நிலை சரியில்லை என்று அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றவர்கள், 75 நாட்களுக்கு பிறகு உயிரற்ற உடலாகத்தான் ராஜாஜி அரங்கிற்கு கொண்டு வந்தார்கள்.

அறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆர் அவர்கள் இறந்தபோது கூட அவரை அடக்கம் செய்த பின்னர் தான் இடைக்கால முதல்வர்கள் பதவியேற்றார்கள்.

ஆனால், இப்போது தலைகீழாக நடந்துள்ளது. அவரை அடக்கம் செய்வதற்கு முன்னரே இடைக்கால முதலவர் பதவியேற்றுள்ளார் என சீமான் கூறியுள்ளார்.
Share:
Read More

Popular Posts

Blog Archive