நண்பர் கௌரவ விஜேதாச இராஜபக்ச அவர்கள் கூறியதாக ஒரு செய்தி 09.12.2016ந் திகதிய தினக்குரல் முதற் பக்கத்தில் ‘பௌத்த சிங்கள மக்களை விக்னேஸ்வரன் ஆத்திரமூட்டக் கூடாது’ என்றும் வீரகேசரியில் ‘வடமாகாணசபைக்கு அதிகாரம் இல்லை’ என்றும் காலைக்கதிரில் ‘புத்தர் சிலை அமைக்கக் கூடாது என கூறுவதற்கு விக்னேஸ்வரன் யார்’ என்ற தலையங்கங்களின் கீழும் வெளிவந்தன. வலம்புரியில் ‘வடக்கின் தீர்மானம் குப்பைத் தொட்டிக்குள்’ என்ற தலையங்கத்தின் கீழும் இவ்வாறான செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றில் வடக்கில் புத்தர் சிலைகளை அமைக்க இடமளிக்கக்கூடாது என்று நாங்கள் தீர்மானம் கொண்டு வந்ததாகக் கூறப்பட்டது. இது முற்றிலுந் தவறு.
எனக்கு நன்றாக அறிமுகமான ஒருவரான அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் மேற்படி கூற்றை வெளியிட முன்னர் என்னுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். அவ்வாறில்லாமல் தவறான செய்திகளை முன்வைத்து தவறான கருத்துக்களை பாராளுமன்றத்தில் பதிய வைப்பது கவலைக்குரியதாக அமைகின்றது. பௌத்தர்கள் வாழாத இடத்தில், சட்டத்திற்குப் புறம்பாக, சட்ட அனுமதி பெறாமல், பலாத்காரமாகப் புத்தர் சிலைகளைத் தனியார் காணிகளில் இராணுவத்தினரின் துணையுடன் அமைப்பதையே நாங்கள் கண்டிக்கின்றோம். புத்தர் சிலையென்ன, இந்துத் தெய்வங்களின் சிலையென்ன, கிறீஸ்தவர்களின் சிலை என்ன வேறெந்த மதத்தவர் சிலையென்றாலும் சட்டப்படி அமைப்பதை நாங்கள் தடுக்க மாட்டோம். தான்தோன்றித்தனமாக அமைத்தால் அதற்கு எங்கள் ஆட்சேபணையைத் தெரிவிக்கத் தயங்கவும் மாட்டோம். அமைச்சர் விஜேதாச அவர்களின் கூற்றுக்கள் எமது தமிழ்ப் பேசும் மக்களுக்கே ஆத்திரமூட்டியுள்ளன. சொல்லாததைச் சொன்னதாகக் கூறிக் குற்றஞ் சாட்டினால் யாருக்குத் தான் ஆத்திரம் வராது.
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தென்பகுதியில் இருந்த தமிழ் மக்கள் எவ்வாறு விரட்டியடிக்கப்பட்டார்கள், அவர்கள் ஆலயங்கள் எவ்வாறு சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன, அதன் பின்னர் அவற்றுள் பெரும்பான்மையானவை மீளக் கட்டப்படவில்லை போன்றவை பற்றியெல்லாம் திரு.இராஜபக்ச அவர்கள் அறியாதவராக இருக்க முடியாது. இந்து மக்கள் விரட்டி அடிக்கப்பட்ட காரணத்தினால் தெற்கில் இந்துக் கோயில்கள் கட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால் பௌத்தர் அல்லாதோர் வசிக்கும் இடங்களில் இராணுவத்தினரின் உதவியுடன் பௌத்த கோயில்களைத் தனியார் காணிகளில் கட்ட முற்படுவது ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே கொள்ள வேண்டியுள்ளது.
அண்மையில் சிங்கள அகராதியின் ஆசிரியர் வணக்கத்திற்குரிய கலாநிதி அகுரடியே நந்தா தேரோ அவர்கள் வேறு இரு பௌத்த பிக்குமார்களுடன் என்னைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் கூட பௌத்தர் இல்லாதோர் இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக புத்த சிலைகளை நிர்மாணிப்பதைத் தாம் கண்டிப்பதாகக் கூறினார்கள். சட்டப்படி மனுச் செய்து எந்த மதத்தினரும் உரியவாறு தமது வணக்கஸ்தலங்களை வடமாகாணத்தில் அமைக்கலாம். சட்டத்திற்குப் புறம்பாக அமைப்பது பற்றியே நாங்கள் கருத்துத் தெரிவித்தோம்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
Friday, 9 December 2016
Popular Posts
-
இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிக கொடூரமான இன அழிப்பு என்றால் இலங்கை தமிழ் இன அழிப்பை குறிப்பிடலாம். தமிழ் இன அழிப்பு இடம் பெற்ற வேளை ஐநா சபை...
-
இத்தளத்திற்கு சென்று http://www.aimersoft.com/video-editor.html என்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை தறவிரக்கலாம். பலவி...
-
வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன் பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்பவானான ...
-
அனைத்து கிறிஸ்தவ தொலை கட்சியை ஒரே தளத்தில் காண அத்துடன் தமிழில் வேதாகமத்தை வாசிக்க இங்கே இலங்கை தமிழ் கத்தோலிக்க தொலைக் காட்சியை காண h...
-
பொதுவாக குழந்தையின்மை பிரச்சனைகள் இருக்கும் தம்பதிகள், செயற்கை முறையில் கருத்தரிக்க விரும்பும் போது கணவரின் விந்தணுக்களை மருத்துவர் சோதித்து...
-
வட மாகாண சபையின் இன அழிப்பு தீர்மானம் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியாவின் பதில் என்ன? என்...
-
இந்த பதிவு வெளியாகிய போது காங்கிரஸ் அரசு உலக அரசுகள் மற்றும் இலங்கை அரசு இலங்கை தமிழர் உரிமையை போட்டு மிதித்தது இந்த பதிவில் உள்ளது...
-
என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலைய...
Blog Archive
-
▼
2016
(521)
-
▼
December
(39)
- ஸ்கைப்பில் ஒரு புதிய வசதி !
- வலைப்பதிவின் சகல தலைப்பின் கீழ் கூகுள் விளமபரங்கள்...
- பன்மொழிக் கல்வி ஏன் அவசியம் - மொழிப்பிரியன்
- ஆண்ட்ராய்டு vs ஐபோன்
- ஈழத்து பெண் சபறினா பிரான்ஸ் நாட்டு அழகியாக தெரிவாக...
- தலை பாகை தமிழ் கவியுடன் சந்திப்பு
- ஸ்கைப் பதிவிறக்கம் செய்வது எப்படி ?
- வனப் பிரதேசத்தின் அவசியத்தை நாங்கள் அறிந்திருக்க வ...
- புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... ...
- உன்னை கண்டவுடன் ஏனோ நான் சிலையாகிறேன்
- வினோத உணவு விடுதி
- Google AdSense new ad unite உருவாக்கவது எப்படி ?
- எம்பாமிங்கு செய்வது எப்படி ?
- YouTube முலம் பணம் சம்பாதிப்பது எப்படி ?
- தாயை சந்திக்க சென்ற மோடி..!!
- வேற்று கிரக வாசிகளின் சோதனை விண் கலம்
- பாரிசில் தொடரும் தேடுதல் வேட்டை!! - மேலும் ஒரு பயங...
- ஜெயலலிதா மரணத்தில் மர்மம்? - சீமான்
- வீட்டிலேயே விந்தணு சோதனை செய்யலாம்
- மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்
- மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்
- விந்தணு சோதனை வீட்டிலேயே செய்யலாம்
- மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்
- விந்தணு சோதனை வீட்டிலேயே செய்யலாம்
- விஜேதாச கூற்றுக்கு வடமாகாண முதலமைச்சர் விளக்கம்
- விஜேதாச கூற்றுக்கு வடமாகாண முதலமைச்சர் விளக்கம்
- ஜெயலலிதா மரணமும் அப்துல் கலாமின் மரணத்தில் உள்ள மர...
- ஆறு வினாடிகளில் ஹேக் செய்ய முடியும் அதிர்ச்சி தகவல்
- ஆறு வினாடிகளில் ஹேக் செய்ய முடியும் அதிர்ச்சி தகவல்
- ஆறு வினாடிகளில் ஹேக் செய்ய முடியும் அதிர்ச்சி தகவல்
- ஜெயலலிதா மரணமும் அப்துல் கலாமின் மரணத்தில் உள்ள மர...
- நாங்க வேற மாறி Bro Tamil Christian Song Pas John J...
- ஆங்கிலத்தை விரைவாக இலகுவாக கற்க கடைபிடிக்க வேண்டிய...
- ஆங்கிலத்தை விரைவாக இலகுவாக கற்க கடைபிடிக்க வேண்ட...
- ஆங்கிலம் கதைக்க சிரமமாக இருக்கின்றதா? கவலையை விடுங...
- ஈழத்தமிழ் பெண்மணி சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுர...
- ஈழத்தமிழ் பெண்மணி சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுர...
- Donald J. டிரம்ப்பை வெற்றி பெற்றது எப்படி ?
- Rajivgandhi துரோகி.தமிழருக்கு துரோகம் india செய்தத...
-
▼
December
(39)
0 comments:
Post a Comment